Theme Check

கட்டாய திருமணம்.. கேலி கிண்டல்கள்.. திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் சோக முடிவு !!

கட்டாய திருமணம்.. கேலி கிண்டல்கள்.. திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் சோக முடிவு !!

கட்டாய திருமணம்.. கேலி கிண்டல்கள்.. திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் சோக முடிவு !!
X

திருமணமான 4 மாதத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் அகிலன் (27). சென்னை கிண்டியில் உள்ள குடிநீர் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வரும் இவருக்கும், உறவினரான வியாசர்பாடியைச் சேர்ந்த ரோனிஷா (22) என்பவருக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

suicide

அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்த ரோனிஷா, திருமணத்துக்கு பிறகும் கல்லூரிக்கு சென்றுவந்தார்.
கணவர் மற்றும் மாமனார் குணசீலன், மாமியார் மீனா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்துவந்தார். இந்த நிலையில், நேற்று காலை குணசீலன் அரக்கோணத்தில் உள்ள தனது வயல்வெளியை பார்க்க சென்றுவிட்டார். இதன்பிறகு மற்றவர்களும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரோனிஷா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதை பார்த்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரது கணவர் கதறி அழுதார். இதுபற்றி அறிந்ததும் ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரோனிஷா சடலத்தை மீண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

suicide

இதில், ரோனிஷாவுக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை. இதனால், திருமணமான நாள் முதலே அவர் விரக்தியில் இருந்துள்ளார். திருமணத்துக்கு பிறகு, கல்லூரிக்கு செல்லும் போது தோழிகள் கேலி, கிண்டல் செய்ததால் மனஉளைச்சல் அடைந்தார் எனவும் கூறப்படுகிறது. இதனால்தான் ரோனிஷா தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளதாக விசாரணை நடத்திய போலீசார் கூறுகின்றனர். திருமணமாகி 4 மாதங்கள் ஆவதால் திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடத்துகின்றார்.


newstm.in

Next Story
Share it