வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம் என்பது கொடுமையான குற்றம்- டெல்லி அரசு
வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம் என்பது கொடுமையான குற்றம்- டெல்லி அரசு

மனைவியுடன் வலுக்கட்டாயமாக தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்திய வன்கொடுமை சட்டத்தில் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், ஒரு பெண், ஒரு ஆண் சார்பில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், வலுக்காட்டாயமாக மனைவியுடனான தாம்பத்யம் என்பது நமது வீடுகளில் நடக்கும் மிகப்பெரிய பாலியல் வன்முறை. திருமணம் என்ற கட்டமைப்பில் எத்தனை முறை பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. அவற்றில் எத்தனை பதிவு செய்யப்படுகிறது. இந்த தகவல்கள் ஒருபோதும் பதியப்படுவதில்லை, ஆராயப்படுவதுமில்லை, என்றார்.

இதனை தொடர்ந்து டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம் இந்தியாவில் நடக்கும் கொடுமையான குற்றம். திருமணமான பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் ஒவ்வொரு சட்டத்திலும் வித்தியாசமாக கருத்தப்படுகின்றனர், என்றார். இந்த வழக்கிலும், தொடர்ச்சியாக வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
newstm.in

