பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார்.. இயக்குநர் மீது நடிகை பரபரப்பு புகார்..!
பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார்.. இயக்குநர் மீது நடிகை பரபரப்பு புகார்..!

பன்னாட்டு பெண்கள் அமைப்பின் நிறுவனர் செங்கோடி பாலகிருட்டிணன், சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி (எ) பைரவி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோடி பாலகிருட்டிணன், “சின்னத்திரையில் துணை நடிகையாக பணியாற்றி வரும் பரமேஸ்வரி (எ) பைரவிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.
விவாகரத்தான நடிகைக்கு இயக்குநர் ராஜா தேசிங்கு சுப்பிரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சினிமாத் துறையில் ஒத்துழைத்தால் மட்டுமே நல்ல நிலைக்கு வர முடியும் என நடிகையிடம் கூறிய அவர், தன்னுடன் இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறு நடிகையிடம் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய நடிகை, ராஜா தேசிங்கு மணியிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் ‘இளமை இதோ இதோ’ எனும் படத்தை தொடங்கியதாகவும் தெரிகிறது.
நாளடைவில், நடிகையை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறிய இயக்குனர் ராஜா தேசிங்கு, அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி மனைவி எனக் கூறி வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர், பைரவியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி அடித்து துன்புறுத்தியதாகவும், இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் நடிகைக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
மேலும், ராஜா தேசிங்கு குறித்து நடிகை விசாரித்தபோது, ஏற்கனவே ஒரு சிறுமியை 100 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததற்காக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நடிகை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ராஜா தேசிங்கு மீது புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு நடவடிக்கை எடுக்காததால், தற்போது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
எனவே, இயக்குனர் ராஜா தேசிங்கு மீது அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என செங்கோடி பாலகிருட்டிணன் தெரிவித்தார்.

