வெந்து தணிந்தது காடு பட ஹீரோயின் அப்டேட்..!
வெந்து தணிந்தது காடு பட ஹீரோயின் அப்டேட்..!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஹீரோயினாக நடிக்கவுள்ளவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் சிம்பு. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். வெந்து தணிந்தது காடு என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
முதன்முறையாக சிம்புவுக்கு அம்மாவாக நடிகை ராதிகா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் கதாநாயகியாக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கயாடு லோகர் என்பவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முதன்முறையாக கிராமப் பின்னணியில் உருவாகும் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். அப்போது கூட தமிழகத்தைச் சேர்ந்தவரை கதாநாயகியாக நடிக்கவைக்கக் கூடாதா என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கவுதமிற்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

