Theme Check

என்னை மன்னித்து விடுங்கள்.. கைதுக்கு பயந்து கதறும் வாசன்..!

என்னை மன்னித்து விடுங்கள்.. கைதுக்கு பயந்து கதறும் வாசன்..!

என்னை மன்னித்து விடுங்கள்.. கைதுக்கு பயந்து கதறும் வாசன்..!
X

கோவையைச் சேர்ந்த யூ-டியூபர் டிடிஎஃப் வாசன். இவர், சூப்பர் பைக்குகளை பயன்படுத்தி பயணம் செய்து பல்வேறு வீடியோக்களை தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். இவரை, 28 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், யூ-டியூபர் டிடிஎஃப் வாசன் சமீபத்தில் சுமார் 247 கிலோமீட்டர் வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கும் வீடியோவை தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டிருந்தார்.
Image
இதையடுத்து, டிடிஎஃப் வாசன் அளவுக்கு அதிகமாக வேகத்துடன் வண்டி ஓட்டுவதாகவும், இது சிறுவர்களை தவறாக வழிநடத்தும் என்றும் கூறி, அவர் 240 கி.மீட்டரில் பைக் ஓட்டிய புகைப்படத்தையும் சிலர் பகிர்ந்து ட்விட்டர் மூலம் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனால் வாசன் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி எதிர்மறையாக பேசுகிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

நான், ‘பைக்கை வேகமாக ஓட்டுங்கள்’ என்று யாரையும் ஊக்கப்படுத்த வில்லை; ஒருவேளை அவ்வாறு நான் ஊக்கப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

240 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது பைக்கின் செயல்திறனை சோதிப்பதற்காக மட்டும்தான். ஆனால், சில செய்தி சேனல்கள் என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

Next Story
Share it