என் கருவை கலைக்க வைத்த முன்னாள் அதிமுக அமைச்சர் - நாடோடிகள் பட நடிகை புகார்!

என் கருவை கலைக்க வைத்த முன்னாள் அதிமுக அமைச்சர் - நாடோடிகள் பட நடிகை புகார்!

என் கருவை கலைக்க வைத்த முன்னாள் அதிமுக அமைச்சர் - நாடோடிகள் பட நடிகை புகார்!
X

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் ஏமாற்றி கருவை கலைக்க வைத்ததாக நாடோடிகள் பட நடிகை சாந்தினி தேவா பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.

அந்த மனுவில், தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுவதாக தெரிவித்தார். மேலும் தன்னை கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார் என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.எனவே எனது தொடர்பான அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் அழிக்க வேண்டும். அத்தோடு அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் தான் இந்த மணிகண்டன்.

Tags:
Next Story
Share it