ஆசிரியரின் உயிரைக் காவு வாங்கிய பாஜக முன்னாள் எம்.பி! கர்நாடகாவிலும் ஒரு செல்லூர் ராஜூ!
ஆசிரியரின் உயிரைக் காவு வாங்கிய பாஜக முன்னாள் எம்.பி! கர்நாடகாவிலும் ஒரு செல்லூர் ராஜூ!

மூக்கில் எலுமிச்சை சாறுவிட்டால் கொரோனா குணமாகிவிடும் என்று பரவி வரும் வதந்தியை நம்பி அதனை செயல்படுத்திய ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு இடையே அதை சார்ந்து பரவும் வதந்திகள் ஏராளம். அதில் ஒன்று தான் மூக்கில் எலுமிச்சை சாறு விட்டால் கொரோனா தொற்று சரியாகி விடும் என்பது.
முன்னதாக கர்நாடகா பாஜக முன்னாள் எம்.பியும், தொழிலதிபருமான விஜய் சங்கேஷ்வர் மூக்கில் எலுமிச்சை சாறு ஊற்றினால் கொரோனா சரியாகி விடும் என வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதை செய்தும் பார்த்த அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் இதே வதந்தியை நம்பி இன்னொரு உயிர் பறிபோய் உள்ளது.

கர்நாடகா மாநிலம் சிந்தானூரை சேர்ந்த பசவராஜ் (45) என்ற ஆசிரியருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தனக்கு கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகம் அடைந்த அவர், மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டிருக்கிறார்.
பின்னர் வாந்தி எடுத்த பசவராஜ் உயிரிழந்துவிட்டார். எனவே மக்கள் இது போன்ற வதந்திகளை நம்பி உயிரை பறிக்கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
newstm.in

