Theme Check

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!
X

இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் கொரொனா பாதிப்புக்கு எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை.

அந்த வகையில், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், “லேசான அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டேன்.

என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story
Share it