Theme Check

முன்னாள் முதல்வர் கவலைக்கிடம்.. மருத்துவமனை தகவல்..!

முன்னாள் முதல்வர் கவலைக்கிடம்.. மருத்துவமனை தகவல்..!

முன்னாள் முதல்வர் கவலைக்கிடம்.. மருத்துவமனை தகவல்..!
X

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் தலைவர் வித்யாபதி தெரிவித்துள்ளார்.

5-வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15-ம் தேதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிலைய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, 5-வது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், ராஞ்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலுவின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. இதுகுறித்து டாக்டர்கள் குழுவின் தலைவர் வித்யாபதி கூறியதாவது: “லாலு பிரசாத்தின் ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் ஏற்ற இறக்கமாக உள்ளது.

சர்க்கரை அளவு காலையில் 70 ஆக இருக்கிறது. ஆனால், பிற்பகலில் 240 ஆக உயர்ந்து விடுகிறது. ரத்த அழுத்தம் 130 முதல் 160 வரை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. அவரது சிறுநீரகம் வெறும் 20 சதவீத திறனுடன் இயங்கி வருகிறது. அவரது உடல்நிலை மோசமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

Next Story
Share it