Theme Check

முன்னாள் முதல்வர் காலமானார்..!!

முன்னாள் முதல்வர் காலமானார்..!!

முன்னாள் முதல்வர் காலமானார்..!!
X

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் (வயது 89), உடல்நலக் குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாலும் சுய நினைவு குறைந்ததாலும், ஜூலை 4ம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு கல்யாண் சிங் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கல்யாண் சிங் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்தார்.அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. டிசம்பர் 26, 1992ல் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Tags:
Next Story
Share it