Theme Check

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காலமானார்... தலைவர்கள் இரங்கல் !!!

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காலமானார்... தலைவர்கள் இரங்கல் !!!

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காலமானார்... தலைவர்கள் இரங்கல் !!!
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான மோசஸ் காலமானார்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மோசஸ். டாக்டரான இவர் முன்னாள் எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்தவர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு வயது 93 ஆகிறது. அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மோசஸ் 1971ஆம் ஆண்டு சுதந்திரா கட்சியின் சார்பிலும், 1989, 1991ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 1978ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்தவர்.

congress

இவருக்கு ஷீலா என்ற மனைவியும், டாக்டர் வெனிட்டா பீட்டர்ஸ், டாக்டர் மஞ்சுளா ஸ்டீபன், டாக்டர் அஞ்சனா மாலா பாபி ஆகிய 3 மகள்களும், 5 பேரக்குழந்தைகளும் உள்ளனர். மோசஸ் தந்தை மத்தியாசும் குமரி மாவட்டத்தில் பிரபலமான டாக்டர் ஆவார்.

இந்தநிலையில் மோசஸ் நேற்று மாலை 4 மணிக்கு அவர் திடீர் மரணம் அடைந்தார். இவரது நல்லடக்க ஆராதனை இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. ஹோம் சர்ச் முதலாவது கல்லறை தோட்டத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே நேற்று மோசஸ் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

newstm.in

Next Story
Share it