Theme Check

முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மறைவு..

முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மறைவு..

முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மறைவு..
X

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஜிவிஜி கிருஷ்ண மூர்த்தி காலமானார்.

இந்திய தேர்தல் ஆணையத் தின் தலைமை தேர்தல் ஆணையருடன் 2 ஆணையர்கள் பணியாற்றுவார்கள். அந்த வகையில்,கடந்த 1990 முதல் 1996 வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது, 1993 முதல் 1996 வரை தேர்தல் ஆணையராக இருந்தவர் ஜிவிஜி கிருஷ்ணமூர்த்தி. அவர் பதவியில் இருந்த காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை சேஷன் குழு மேற்கொண்டது.

இந்த நிலையில் 86 வயதான கிருஷ்ண மூர்த்தி டெல்லியில் தங்கியிருந்து வருகிறார். வயது மூப்பு காரணமாக அவர் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைப்பாடு காரணமாக நேற்று காலை 10 மணிக்கு அவர் காலமானார்.


அவருக்கு பத்மா என்ற மனைவி, ஜி.வி.ராவ் என்ற மகன், ராதா போடபதி என்ற மகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு, இரங்கல் தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையராக கிருஷ்ணமூர்த்தி இருந்தபோது செய்த சிறப்பான பங்களிப்புகள், அவரது பணிகளை நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும் ஜிவிஜி கிருஷ்ண மூர்த்தி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it