கோவா முன்னாள் முதல்வர் பாஜகவில் இருந்து விலகல்..!!
கோவா முன்னாள் முதல்வர் பாஜகவில் இருந்து விலகல்..!!

கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் சவால் இருக்கும் எனத்தெரிகிறது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா- என்.சிபி ஆகிய கட்சிகளால் கடும் போட்டியை பாஜக எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், அண்மையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.
இதில், மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான லக்ஷ்மிகாந்த் பர்சேகருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பர்சேர்கர் கூறுகையில், “பாஜகவில் நீடிக்க விரும்பவில்லை அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது பின்னர் முடிவு செய்வேன்” எனக் கூறினார்.

