Theme Check

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி!!
X

திமுக பிரமுகரை தாக்கி அவமானப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மனு விசாரணைக்கு வந்த போது, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்த வழக்கு அரசியல் உள் நோக்கத்துடன் பதியபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்ககோரிய மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தார்.

சட்டம் படித்த முன்னாள் அமைச்சரான அவர் இது போன்ற செயல்களை செய்வது துரஷ்திடவசமானது என்றும், சாதாரண நபரை அரை நிர்வாணபடுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி அவருக்கு பெரிய பாதிப்பை எற்படுத்தியுள்ளதாக புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

jayakuma

வாக்கு சாவடிக்குள் நுழைய அரசியல் கட்சியை சேரந்தவருக்கு மாநில தேர்தல் ஆணையம் எந்த அதிகாரமும் வழங்காத போது, வாக்குசாவடிக்குள் நுழைந்து கலவரத்தை தூண்டியுள்ளதாக தெரிவித்தார்.

ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் என்பதால் ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், எம்.பி. - எம்.எல்..க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என வாதிட்டார்.

jayakuma

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றம் அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் ஜாமீன் மனுக்களை மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என குறிப்பிடப்படவில்லை எனவும், ஜாமீன் மனு மற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் எனவும், சாட்சி விசாரணை மட்டுமே சிறப்பு நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், காவல் துறையின் ஆட்சேபத்தை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

newstm.in

Next Story
Share it