பிரதமர் வீட்டை முற்றுகையிட தனி ஆளாக புறப்பட்ட முன்னாள் எம்எல்ஏ! 48 மணி நேரம் கெடு விதித்து எச்சரிக்கை !!
பிரதமர் வீட்டை முற்றுகையிட தனி ஆளாக புறப்பட்ட முன்னாள் எம்எல்ஏ! 48 மணி நேரம் கெடு விதித்து எச்சரிக்கை !!

இந்தியாவில் கொரோனா தீவிரமாக இருக்கும் நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றே கூறலாம். அதாவது உச்சத்தில் இருந்து தற்போது நாள்ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் ஓரளவுக்கு நிம்மதியடைந்துள்ளனர். மேலும் அடுத்த அலை ஏற்படாதவாறு அங்கு தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.

ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்தினாலும் டெல்லிக்கு தற்போது சவாலாக திகழ்ந்து வருகிறது கருப்பு பூஞ்சை நோய். டெல்லியில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் போதிய அளவில் இல்லை என கூறப்படுகிறது.
எனவே இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக போதிய மருந்துகளை ஏற்பாடு செய்யக்கோரி பிரதமர் மோடியின் வீட்டுமுன் போராட்டம் நடத்துவதற்காக டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் சர்மா முயற்சி செய்தார்.

போராட்டத்துக்காக வீட்டில் இருந்து கையில் கட்சிக்கொடியுடன் கிளம்பிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. எனினும் போராட்டத்தை கைவிடாத அவர் தனது வீட்டிலேயே தர்ணாவில் ஈடுபட்டுடார். அடுத்த 48 மணி நேரத்துக்குள் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் பிரதமர் வீட்டுமுன் நிச்சயம் போராடுவேன் எனவும் அவர் அறிவித்து உள்ளார். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in

