Theme Check

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!
X

இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நேற்று நடைபெற்றது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிற வாக்கு சீட்டு அளிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பேனாவை பயன்படுத்தி மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

1

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த எம்.பிக்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்கு சாவடியில் முதலமைச்சர் ஸ்டாலின். முதல் ஆளாக தனது வாக்கினை அவர் பதிவு செய்தார்.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.

Tags:
Next Story
Share it