Theme Check

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்..!!

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்..!!

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்..!!
X

உடல்நலக்குறைவு காரணமாக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் இன்று காலமானார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் அவருக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூலை 4-ம் தேதி முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்து வந்தநிலையில், உள் உறுப்புகள் செயலிழப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்யாண் சிங் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 முதல் 1999-ம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்தார். மேலும் அவர் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். கல்யாண் சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it