Theme Check

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
X

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தத் தலைவருமான திரு.புத்ததேவ் பட்டாச்சார்யா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்க மாநில முதலமைச்சராக திரு. புத்ததேவ் பட்டாச்சார்யா, கடந்த 2000மாவது ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். 77 வயதான புத்ததேவ் பட்டாச்சார்யா, ஏற்கெனவே உடல் நலம் பாதிக்‍கப்பட்டிருந்தபோது, கொரோனா முதல் அலையில் தொற்று பாதிப்பில் இருந்து தப்பினார்.

இந்நிலையில், தபுத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் அவரது மனைவி மிரா பட்டாச்சார்யா ஆகியோரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்‍கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திடீரென நேற்று காலை உடலில் ஆக்சிஜன் 90-க்கு கீழ் குறைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்ததேவ் பட்டாச்சார்யா, மனைவி மிரா பட்டாச்சார்யா கடந்த வாரம் தொற்று உறுதியாகி சிகிச்சைபெற்று வந்தவர் திங்கட்கிழமைதான் டிஸ்சார்ஜ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:
Next Story
Share it