Theme Check

பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச பசும்பால்..!!

பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச பசும்பால்..!!

பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச பசும்பால்..!!
X

கோவை ஜி.டி. அரங்கில் மக்கள் சேவை மையம் சார்பில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டு வயது குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் ’அமுதம் திட்டம் தொடக்க விழா’ சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமுதம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த விழாவில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தினையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தாய்மனதுடன் இந்த முயற்சியை வானதி சீனிவாசன் செய்து இருக்கின்றார்" என்றார்.

Next Story
Share it