திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு !
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு !

கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக திரும்பபெறப்பட்டதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் காலை வெளியிடப்பட்டது. ஆனால், 4.52 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தன. அண்மைக்காலமாக கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இந்தமுறை போட்டிபோட்டு பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், இலவச தரிசன டிக்கெட் நாளை வெளியீடப்படுகிறது. ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 1 முதல் 12ஆம் தேதி 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளும், 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என 1.60 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் 5 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் கவுண்டர்களில் விநியோகிக்க தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை அலிபிரி சோதனைச்சாவடியில் தேவஸ்தான ஊழியர்கள் தடுத்து நிறுத்தி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த இருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு வருவதற்கு 48 நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தடுப்பூசி மற்றும் சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் அலிபிரியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் முன்பாக கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in

