Theme Check

தேர்தல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு இலவச எண்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தேர்தல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு இலவச எண்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தேர்தல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு இலவச எண்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
X

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, தேர்தல் சம்பந்தமான விதிமீறல்கள் உட்பட, வாக்காளர்களுக்கு எழும் அடிப்படை சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இலவச தொலைபேசி எண்ணை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தல் சம்பந்தமான புகார்களுக்கும், சந்தேகங்களுக்கும் அரசியல் கட்சியினர்களின் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக புகார் தெரிவிக்கவும், உங்கள் ஊரின் எஸ்.டி.டி. எண்ணையும் சேர்த்து 1950 என்ற எண்ணிலோ அல்லது 1800 4252 1950 என்கிற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா, ‘தேர்தல் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறைகள் மற்றும் வேட்பாளர்கள் விதிமுறைகள் மீறல் குறித்தும், தேர்தல் குறித்த சந்தேகங்களைக் குறித்தும் வாக்காளர்கள் 1950 என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த எண்ணிற்கு வரும் அனைத்து அழைப்புகளும் ரெகார்ட் செய்யப்படும்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. வாக்கு செலுத்த வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் கையுறை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it