ஏழைக் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள்.. மத்திய அரசு !!
ஏழைக் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள்.. மத்திய அரசு !!

ஏழைக் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு ரேஷன் உணவுப் பொருள்களை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக ரேஷன் உணவுப் பொருள்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏழைக் குடும்பங்களின் பொருளாதார சிரமங்களைத் தணிப்பதற்கு இது உதவும் என முடிவு செய்யப்பட்டது.
இ
ந்தத் திட்டத்தின் கீழ் நபா் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம், 79.88 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்தத் திட்டப்படி சுமாா் 80 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்படும். இவற்றை இலவசமாக வழங்குவதால் அரசுக்கு ரூ.25,332.92 கோடி செலவாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வங்கியில் மத்திய அரசும், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் (எல்ஐசி) இணைந்து 94 சதவீத பங்குகளை வைத்துள்ளன. அதில், எல்ஐசி மட்டுமே 49.1 சதவீத பங்குகளை வைத்துள்ளது. அந்தப் பங்கின் அளவைக் குறைத்துக் கொள்வதற்கு எல்ஐசி அண்மையில் முடிவு செய்தது.

இந்த நிலையில் இந்த வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐடிபிஐ வங்கியில் புதிதாக பங்குகளை வாங்கும் நிறுவனம், புதிய தொழில்நுட்பம், நிா்வாகத்துடன் வங்கியை அடுத்தகட்ட வளா்ச்சிக்கு கொண்டு செல்லும். அந்த நிறுவனம் மத்திய அரசையும் எல்ஐசியையும் சாா்ந்திருக்காமல் செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

