கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு இலவசம்… நெகிழவைக்கும் அறிவிப்பு !
கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு இலவசம்… நெகிழவைக்கும் அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், குழந்தைகள் என முக்கிய உறவுகளையும் இழந்து பலரும் தவித்து வருகின்றனர். குறிப்பாக பெற்றோரை கொரோனாவால் இழந்து ஏராளமான குழந்தைகள் தவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் முதல் அலையை விட இரண்டாம் அழை தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

கொரோனா 2ஆவது அலையில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் உதவித்தொகை வழங்கி வருகின்றன. தனியார் அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதேபோல் பல்வேறு கல்வி நிறுவனங்களும் அக்குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள மிகப்பிரபலமான பள்ளிகளில் ஒன்றாக ஹைதராபாத் பப்ளிக் பள்ளி கருதப்படுகிறது. பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் மட்டுமே இப்பள்ளியில் படிக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், அடுத்த ஆண்டுக்கு அனைவருக்கும் ரூ10,000 பள்ளி கட்டணத்திலிருந்து தள்ளுபடி அளிக்க படுவதாகவும் தெரிவித்துள்ளது.
newstm.in

