Theme Check

நட்பாக பழகி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. வடமாநில இளைஞர்கள் கொடூரம் !

நட்பாக பழகி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. வடமாநில இளைஞர்கள் கொடூரம் !

நட்பாக பழகி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. வடமாநில இளைஞர்கள் கொடூரம் !
X

திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர். இதற்காக வாடகைக்கு வீடு, அறை எடுத்து அவர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் வடமாநில பெண்ணுக்கு நடந்த பயங்கரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பெண் அவருடன் பழகியதாக கூறப்படுகிறது.

police

இந்நிலையில், அந்தப் பெண்ணை பால்ராஜ் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் வீட்டில் அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் அவரது நண்பர்களான பிரதீப் குமார், மனோஜ் குமார் ஆகிய இருவரும் திடீரென வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் அந்தப் பெண் மயங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து அந்தப் பெண் நேராக சென்று இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஏற்கனவே திட்டம்போட்டு அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்துவந்த பால்ராஜ் அழைத்ததன்பேரில் தான் மற்ற இருவரும் வீட்டிற்கு வந்தத விசாரணையில் தெரியவந்தது.

rape

மேலும் தலைமறைவாக இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பால்ராஜ், பிரதீப் குமார், மனோஜ் குமார் ஆகிய மூன்று இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in


Next Story
Share it