ஏப்ரல் 1 முதல்.. இந்திய தொழிலாளர்களுக்கு மலேசியா சொன்ன குட் நியூஸ்..!
ஏப்ரல் 1 முதல்.. இந்திய தொழிலாளர்களுக்கு மலேசியா சொன்ன குட் நியூஸ்..!

இந்தியாவுக்கான மலேசிய தூதரும், அந்நாட்டிற்கான ஹை கமிஷனருமான அப்துல் ஹமீது ஹிதாயத், பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; “கொரோனோ தொற்றால் மலேசிய நாட்டில் பணியாற்றிய சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதால், மலேசியாவில் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் சகஜ நிலை ஏற்படும். தொழிலாளர்கள் மீண்டும் மலேசியாவிற்கு திரும்ப முடியும்.
நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும். மலேசியா திரும்பும் இந்திய தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்.
உக்ரைன் - ரஷ்யா போரினால் மலேசியாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வில்லை. எனவே, மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பற்றி அச்சப்படத் தேவையில்லை” என்று அவர் தெரிவித்தார்.

