மோடி உரையின் முழு தொகுப்பு!
மோடி உரையின் முழு தொகுப்பு!

புதுச்சேரியில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிப்ரவரி 17ம் தேதி புதுச்சேரிக்கு வந்து உரையாற்றினார்.இந்நிலையில் பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை தந்துள்ளார். தலைநகர் டெல்லியில் இருந்து இன்று காலையில் விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ராணுவ ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு வந்தார்.புதுச்சேரி கவர்னர் தமிழிசை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பிறகு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் 4 வழிப்பாதை , சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காரைக்காலில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிட பணிகளையும், துறைமுகத்தில் துறைமுக மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றியதில் இருந்து,புதுவை மக்கள் ஒற்றுமையின் அடையாளம். இந்த மண் பன்முகத்தன்மை வாய்ந்தது. இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கும். பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது. புதுச்சேரி மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல திட்டங்கள் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற, கடலோர பகுதிகளை இணைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களின் திறமை வெளிகொண்டு வரப்படும் என தெரிவித்த மோடி தமது உரையாடலில் “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை” என திருக்குறளை மேற்கொள்காட்டி பேசியது பெரும் வரவேற்பை பெற்றது.

