#BREAKING:-நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்..!!
#BREAKING:-நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்..!!

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனால் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக இன்று மீண்டும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசானை நடத்தினார். சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...
- கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை கொரோன தடுப்பூசி முகாம்கள் செய்ல்படும்
- தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு நேரத்தில் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. நாளை ( 6 ஆம் தேதி ) இரவு முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு
- 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை.
- பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி தடுப்பூசி செலுத்தப்பட்டு 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.
- பொருட்காட்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
- பொது பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில் இருக்கைகளில் 50% பயணிகள் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதி
- . மெட்ரோ ரயிலில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய பணிகளுக்கு தடை இல்லை
- அனைத்து வழிபாட்டு தலங்களில் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களுக்கு அனுமதி இல்லை
- அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்தி வைப்பு
எதற்கு எல்லாம் அனுமதி?
- பொது, தனியார் பேருந்து சேவைகளுக்கு அனுமதி
- பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்பட அனுமதி
- பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்கள் செயல்பட அனுமதி
- ஐ.டி.நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

