Theme Check

மூன்று மாவட்டங்களில் முழு ஊரடங்கு.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

மூன்று மாவட்டங்களில் முழு ஊரடங்கு.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

மூன்று மாவட்டங்களில் முழு ஊரடங்கு.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!
X

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளை முழு ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பியதால் சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டும் வாய்ப்புள்ளதால் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து சனிக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
Share it