காதலர் தினத்தன்று தொடங்கும் பிக்பாஸ் புது சீசன்- முழு விபரம்..!
காதலர் தினத்தன்று தொடங்கும் பிக்பாஸ் புது சீசன்- முழு விபரம்..!

மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது சீசன் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இதற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தெரிந்துகொள்ள கேரள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். நாட்டில் பேசப்படும் பல்வேறு மொழிகளில் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் பண்பாடுக்கு ஏற்ப இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.இந்தியில் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதேபோல தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கில் நாகர்ஜுனா, கன்னடத்தில் கிச்சா சுதீப் போன்றோர் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மலையாளத்திலும் நடத்தப்படுகிறது. அங்கு நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே 2 சீசன் ஒளிப்பரப்பான நிலையில், மூன்றாவது சீசனுக்கான படப்பிடிப்பு துவங்கப்பட இருந்தது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மலையாள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
தற்போது அதனுடைய மூன்றாவது சீசன் வரும் பிப். 14-ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது. முந்தைய சீசனை தொகுத்து வழங்கிய மோகன்லால் தான் புதிய சீசனையும் நடத்தவுள்ளார். தற்போது புதிய சீசனுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், அதற்கு கேரள ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. புதிய சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களை தெரிந்துகொள்ள கேரள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

