தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முழு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிப்பு..!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முழு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிப்பு..!!

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆல்க்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த தூப்பாக்கி சுடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
2018 ஜூன் 4ம் தேதி விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணையைத் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த ஆண்டு மே 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்.
இதுவரை 36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டடது. அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நிறைவு பெற்றது. இன்னும் 3 மாதத்தில் விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த முழு அறிக்கையை அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதல்வரை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து இன்று சமர்பித்துள்ளார்.

