முழுமையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.. திமுக வலியுறுத்தல் !!

முழுமையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.. திமுக வலியுறுத்தல் !!

முழுமையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.. திமுக வலியுறுத்தல் !!
X

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என திமுக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும், சிசிடிவி பொறுத்தி கண்காணிக்க வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி கே எஸ் இளங்கோவன் மற்றும் வில்சன் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் செயலாளரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், எல்லா வாக்கு சாவடிகளிலும் சி.சி.டிவி கேமிரா மற்றும் ஜாமர் பொருத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர். சில காவல் துறை அதிகாரிகளை மாற்றுவது போல் மாற்றி விட்டு, வேறு துறையில் நியமித்து அவர்களையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதாகவும் தமிழக அரசு மீது திமுக எம்பிக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே நேர்மையான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆவன செய்ய வேண்டும் என அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

newstm.in


Tags:
Next Story
Share it