Theme Check

சுடுகாட்டில் சூதாட்டம்.. விரட்டிய போலீசார்.. கூவத்தில் குதித்தவர் பலி..!

சுடுகாட்டில் சூதாட்டம்.. விரட்டிய போலீசார்.. கூவத்தில் குதித்தவர் பலி..!

சுடுகாட்டில் சூதாட்டம்.. விரட்டிய போலீசார்.. கூவத்தில் குதித்தவர் பலி..!
X

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், சோராஞ்சேரி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (46). இவரது மனைவி சத்தியவாணி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சரவணன் தனது நண்பர்களுடன் சுடுகாட்டில் சீட்டு விளையாடியுள்ளார். இது குறித்து பட்டாபிராம் போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது. இதையடுத்து சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், ரோந்து வாகனத்தில் அங்கு சென்றுள்ளனர்.

இதைப் பார்த்து பயந்து போன சரவணன் உள்ளிட்ட நண்பர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். இதில், சரவணன் உள்ளிட்ட இருவர் சுடுகாட்டின் அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்துள்ளனர். இதில், சரவணன் ஆற்றில் உள்ள செடி கொடிகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்த அவரது நண்பர் ஜெகன், கிராமத்தில் உள்ள உறவினர்கள், பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள் படகு மூலம் ஆற்றில் இறங்கி சரவணனை தேடினர். 6 மணி நேரத்திற்கு மேலாக தேடியதில் சரவணனின் உடலை மீட்டனர். சரவணனின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என அவருடைய உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:
Next Story
Share it