Theme Check

விளையாட்டு வினையானது.. பயிற்சியின் போது பள்ளி மாணவர் பலி !!

விளையாட்டு வினையானது.. பயிற்சியின் போது பள்ளி மாணவர் பலி !!

விளையாட்டு வினையானது.. பயிற்சியின் போது பள்ளி மாணவர் பலி !!
X

கிணற்றில் நீச்சல் பழகிய போது தண்ணீரில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வடகரை கிராமத்தை சேர்ந்த கேசவன் (17) என்ற பிளஸ்-2 மாணவர், தனது நண்பர்கள் 2 பேருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றுக்கு சென்றார்.

கிணற்றில் மாணவர்கள் நீச்சல் பழகும் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தத்தளித்து கேசவன் மூழ்கி விட்டார். இதை பார்த்து அவருடன் சென்ற 2 பேரும் அங்கிருந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

water death

இந்த நிலையில் நீண்டநேரம் ஆகியும் கேசவன் வீடு திரும்பாததால் மகனை பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது, கிணறு உள்ள பகுதிக்கு தேடிச்சென்ற சிறுவனின் தந்தை சின்ன பையன் கிணற்றில் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். கிணற்று பகுதியில் மகனின் உடைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்று நீரில் மூழ்கிய கேசவனை பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீச்சல் பழக சென்று பள்ளி மாணவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it