Theme Check

இந்தியா பரிசாக கொடுத்த காந்தி சிலை ஆஸ்திரேலியாவில் உடைப்பு !!

இந்தியா பரிசாக கொடுத்த காந்தி சிலை ஆஸ்திரேலியாவில் உடைப்பு !!

இந்தியா பரிசாக கொடுத்த காந்தி சிலை ஆஸ்திரேலியாவில் உடைப்பு !!
X

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர்பகுதியான ரோவில்லே பகுதியில் ஆஸ்திரேலிய- இந்திய சமூக மையம் உள்ளது. இந்த மையம் சார்பில் அப்பகுதியில் மகாத்மா காந்தி முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார். இந்திய அரசு சார்பில் இந்த சிலை பரிசாக கொடுக்கப்பட்டதாகும்.

mahatma-gandhi-statue australia

ஆனால், காந்தி சிலை திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலை சேதப்படுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்துசென்று நடவடிக்கை எடுத்தனர். முதல்கட்டமாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சிலையை அவமதித்து சேதப்படுத்தியவர்கள் பற்றி தெரிந்தால் தகவல் கொடுக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
mahatma-gandhi-statue australia
இதனிடையே, காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு காந்தியை அவமரியாதை செய்வதை பார்ப்பது வெட்கக்கேடானது மற்றும் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என அவர் கூறி உள்ளார். கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், ஆஸ்திரேலிய இந்திய சமூகத்திற்கு மிகுந்த அவமரியாதை செய்தவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it