காந்திகளின் தலைமை வேலைக்கு ஆகாது.. முன்னாள் மத்திய அமைச்சர் கருத்து..!
காந்திகளின் தலைமை வேலைக்கு ஆகாது.. முன்னாள் மத்திய அமைச்சர் கருத்து..!

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றுகிறது.
இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார், “தேர்தல் முடிவுகளில் இருந்து ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது.
இனி, காந்திகளின் தலைமை காங்கிரஸ் கட்சியில் வேலைக்கு ஆகாது என்பதுதான் அது. அவர்கள் இனி கட்சியை வழிநடத்தும் சக்தியாக இருக்கப்போவதில்லை. அவர்களால் தேர்தலில் கட்சியை கரை சேர்க்க முடியாது என்பதை இந்த முடிவுகள் தெளிவாக விளக்குகிறது” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

