Theme Check

10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உறுதி.. அமைச்சர் அளித்த வாக்குறுதி !

10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உறுதி.. அமைச்சர் அளித்த வாக்குறுதி !

10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உறுதி.. அமைச்சர் அளித்த வாக்குறுதி !
X

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படுவது உறுதி என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பரவிய அதேநேரத்தில், தற்போது கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. இதனால் புத்தாண்டு முடிந்த கையோடு பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிகள், கல்லூரிகளும் ஒரு சில மாநிலங்களில் மூடப்பட்டு வருகின்றன. இன்றுகூட கோவாவில் பள்ளிகள் திறப்பு இல்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

school studentஅதேநேரத்தில், தமிழகத்தில் இன்று(ஜன.3) முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதர வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறுகின்றன. மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடக்குமா என்ற அச்சம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஒலித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி தொடங்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

school student

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் கலைஞர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


newstm.in

Next Story
Share it