Theme Check

10, +1, +2 வகுப்புகளுக்கு ஜூனில் பொதுத்தேர்வு ! கல்வித்துறை முடிவு !!

10, +1, +2 வகுப்புகளுக்கு ஜூனில் பொதுத்தேர்வு ! கல்வித்துறை முடிவு !!

10, +1, +2 வகுப்புகளுக்கு ஜூனில் பொதுத்தேர்வு ! கல்வித்துறை முடிவு !!
X

10 -ம் வகுப்பு மற்றும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் பொதுத்தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு விரைவாக தயாராக வேண்டும்.

உலகம் முழுவதும் கொரோனா நோவல் வைரஸ் பரவல் காரணமாக பலர் பலியானார்கள். இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தமிழத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. 1 -ம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2-வுக்கு மட்டும் பொதுத் தேர்வுகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. இதனிடையே, 10 -ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த 19 -ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், 9 -ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு வரும் 8 -ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பொதுத்தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதில், பொதுத்தேர்வை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Tags:
Next Story
Share it