Theme Check

வரும் 7ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் பொதுமுடக்கம்..!

வரும் 7ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் பொதுமுடக்கம்..!

வரும் 7ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் பொதுமுடக்கம்..!
X

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு பொதுமுடக்கத்தை அறிவித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த பொதுமுடக்கத்தின்போது வணிக வளாகங்கள், கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றை முழுவதுமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் மற்றும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 7 மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கோல்பரா, கோலகட், ஜோர்ஹட், லக்ஹிம்பூர், சோனித்பூர், பிஸ்வநாத் மோரிகெளன் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வரும் 7ம் தேதி முதல் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுமுடக்கத்தின்போது வணிக வளாகங்கள், கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றை முழுவதுமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் மற்றும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Next Story
Share it