Theme Check

கொரோனாவில் இருந்து சீக்கிரம் விடுதலை! சூசகமாக உணர்த்திய அழகு பெண் குழந்தை!

கொரோனாவில் இருந்து சீக்கிரம் விடுதலை! சூசகமாக உணர்த்திய அழகு பெண் குழந்தை!


கொரோனா தொற்று உலகம் முழுவதுமே மக்களை கொடூரமாக தாக்கி வருகிறது. பல நாடுகள், இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அப்போது தான் பிறந்த குழந்தை ஒன்று, மருத்துவர் தூக்கியவுடன், அவரது கையில் இருந்தபடியே மருத்துவரின் மாஸ்க்கை அந்தப் பெண் குழந்தை, பிடித்து இழுத்து கழட்ட முயற்சி செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மாஸ்க் உடன் வலம் வருகிறோம். இந்நிலையில் துபாயில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டியெறிய முயன்றுள்ளது.


அந்த படத்தை துபாயை சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவ நிபுணரான மருத்துவர் சமர் செயிப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதோடு நாம் எல்லோரும் மாஸ்க்கிற்கு விடை கொடுக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சமிக்ஞை கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


தற்போது அந்தப்படம் உலகம் முழுவதுமே சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags:
Next Story
Share it