தடுப்பூசி போட்டுக்கோங்க... சிவகார்த்திகேயன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
தடுப்பூசி போட்டுக்கோங்க... சிவகார்த்திகேயன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும் பாதிப்புக்களும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் , தடுப்பு மருந்துகள், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் ,பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என புதிய வீடியோ மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
கொரோனாவில் இருந்து மீள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டும் தான் ஒரே வழி எனக் கூறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நானும் கொரோனா முதல் டோஸை செலுத்திக் கொண்டேன் என அறிவித்துள்ளார். மேலும், மக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என என கூறிய அவர் மாஸ்க் போடுங்க, கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுங்க, வெளியே தேவையில்லாமல் போக வேண்டாம், சமூக இடைவெளியை கடைபிடிங்க அப்போது தான் இந்த கொரோனா போரில் வெல்ல முடியும் என்று உருக்கமாக பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழக அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள் - நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு!#SunNews | #SivaKarthikeyan | #Corona2ndWave | #TamilNadu | @Siva_Kartikeyan pic.twitter.com/VFRnCXoeXs
— Sun News (@sunnewstamil) May 21, 2021
கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

