Theme Check

பாலியல் புகார் – கானா இசையமைப்பாளர் கைது!!

பாலியல் புகார் – கானா இசையமைப்பாளர் கைது!!

பாலியல் புகார் – கானா இசையமைப்பாளர் கைது!!
X

ஆபாச படத்தை வெளியிடுவேன் என கானா பாடல் பாடியே, காதலியை மிரட்டிய கானா இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தானும், தன் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு கானா பாடல்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் தனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்ததாக குற்றம்சாட்டினார்.

abuse

அதுபோன்ற நேரங்களில் தன்னுடன் தனியாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த அவர், தற்போது சமூக வலைத்தளத்தில் அவற்றை வெளியிடுவேன் எனக் கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் சபேஷ் சாலமன் நடத்தும் யூடியூப் சேனலில் தன்னுடைய ஆபாசமான போட்டோ வீடியோக்களை வெளியிட்டதாகவும், மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்தார்.

arrest

தானொரு இசையமைப்பாளர் என்பதால் சபேஷ் சாலமன் பாட்டு பாடியே தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் சபேஷ் சாலமன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியது உறுதியான நிலையில், பெண்ணின் மானத்துக்கு குந்தகம் விளைவித்தல், மிரட்டல், தகவல் தொழிட்நுட்பச் சட்டப் பிரிவு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it