Theme Check

சிறுமிகள் குறித்து ஆபாச வன்மத்துடன் பாடல்.. கானா பாடகர் சரவெடி சரண் கைது !

சிறுமிகள் குறித்து ஆபாச வன்மத்துடன் பாடல்.. கானா பாடகர் சரவெடி சரண் கைது !

சிறுமிகள் குறித்து ஆபாச வன்மத்துடன் பாடல்.. கானா பாடகர் சரவெடி சரண் கைது !
X

சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடி யூடியூபில் வெளியிட்ட சரவெடி சரண் என்ற இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர் சரவெடி சரன் என்ற இளைஞர் கானா பாடல்கள் பாடி அதனை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார். ஒருசில பாடல்களில் உள்ள வரிகள் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாக இருக்கும் என புகார் எழுந்தது. இந்த நிலையில் அண்மையில் சிறுமிகள் குறித்து கானா பாடல் பாடி வெளியிட்டுள்ளார்.

saravedi saran

யூடியூபில் சரவெடி சரன் உள்பட இருவர் கானா பாடலொன்றை பாடி பதிவிட்டுள்ளனர். அதில், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிரான கருத்துகள், மிகுந்த வன்மத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த கானா பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சரவெடி சரண் பாடும் போது “மஜாவாக மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி. பால்வாடியில வாங்கி கொடுத்தேன் பூந்திய, எட்டாவது பாஸாயிட்டு எடுக்க வச்சேன் வாந்தியை.” என பாடியுள்ளார் இந்த வீடியோ தான் தற்போது இவரை போலீஸ் தேடும் அளவிற்கு வம்பில் சிக்க வைத்து இருக்கிறது.

saravedi saran

அந்த வீடியோ குறித்து திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் டிவிட்டரில் குறிப்பிட்டு, அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாகவும், இவர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், யூடியூபில் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய சரவெடி சரண் என்ற இளைஞரை திருவள்ளூர் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it