Theme Check

2 நாட்களில் 7 பேரால் சிறுமி பாலியல் பலாத்காரம்.. காதலன் கைது !!

2 நாட்களில் 7 பேரால் சிறுமி பாலியல் பலாத்காரம்.. காதலன் கைது !!

2 நாட்களில் 7 பேரால் சிறுமி பாலியல் பலாத்காரம்.. காதலன் கைது !!
X

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட ஏழு பேரில், 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 17 சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவன் காதலித்து வந்துள்ளான். தொலைபேசியில் பேசி காதலித்து வந்த இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்து வந்தனர். இந்த நிலையில், சிறுமியை, கடந்த 2ஆம் தேதி இளைஞர் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு, அந்த சிறுமியை காதலன் பாலியல் பலாத்காரம் செய்தான். அடுத்த சில மணி நேரத்தில் காதலன் அளித்த தகவலின் பேரில் நண்பர்கள் மூன்று பேர் அங்கு சென்றனர். அவர்களும் அந்த சிறுமியை மிரட்டி அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின், அந்த சிறுமியை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

rape

அதன்பின், கடந்த 7ஆம் தேதி சிறுமியை, காதலன் மிரட்டி மீண்டும் அதே இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், சிறுமியையும், காதலனையும் சரிமாரியாக அடித்தனர். பின்னர், அந்த மூன்று பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். கிட்டத்தட்ட 2 நாட்களில் ஏழு பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் படுத்திருந்தார்.

rape

அவரது பெற்றோர் விசாரித்ததில், நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நாக்பூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், கடந்த 2 மற்றும் 7ஆம் தேதியில் காதலன் உட்பட ஏழு பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதையடுத்து, காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it