Theme Check

பூஜை செய்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

பூஜை செய்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

பூஜை செய்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!
X

கன்னியாகுமரி மாவட்டம் மணலோடை பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் பில்லி சூனியம் போன்ற மாந்திரிக பூஜை செய்து வருகிறார். இதனால் இவரைப் பலரும் வந்து சந்திக்கின்றனர்.

அந்த வகையில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சேகரை சந்தித்துள்ளார். அப்போது தனது இரண்டு மகள்களுக்கும் உடல் நிலை சரியில்லை என்றும் பல மருத்துவர்களை பார்த்தும் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

அதற்கு மந்திரவாதி சேகர், 'உங்கள் குடும்பத்திற்குச் செய்வினை வைக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும், உங்கள் வீட்டில் இரண்டுநாட்கள் விடிய விடியப் பூசை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

billi

இதை நம்பி தொழிலாளியும் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அப்போது மந்திரவாதி தொழிலாளியின் மகளைத் தனியாக அழைத்து, தான் சொல்வதுபடி நீ கேட்டாள் குடும்பம் நன்றாக இருக்கும் என கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து வெளியே சொன்னால் செய்வினை செய்து குடும்பத்தை அழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி பெற்றோர்களிடம் எதுவும் கூறவில்லை. இதையடுத்து சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பிறகு சிறுமி நடந்தவற்றைக் கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் மந்திரவாதி சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it