Theme Check

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் சித்தப்பா கைது..!

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் சித்தப்பா கைது..!

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் சித்தப்பா கைது..!
X

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாரையூரணி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாலமுருகன் (37). திருச்சியைச் சேர்ந்த இவரது அண்ணன் மகளான 15 வயது சிறுமி, பள்ளி விடுமுறைக்காக நாரையூரணிக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று, வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, அவருக்கு சித்தப்பா பாலமுருகன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: சித்தப்பா 'போக்சோ'வில் கைது- Dinamani
இதனால் அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாலமுருகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார், பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். தொடர்ந்து, பாலமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story
Share it