Theme Check

பாராஒலிம்பிக் மாரியப்பனின் சகோதரர் மீது இளம்பெண்ணின் தந்தை பரபரப்பு புகார் !!

பாராஒலிம்பிக் மாரியப்பனின் சகோதரர் மீது இளம்பெண்ணின் தந்தை பரபரப்பு புகார் !!

பாராஒலிம்பிக் மாரியப்பனின் சகோதரர் மீது இளம்பெண்ணின் தந்தை பரபரப்பு புகார் !!
X

பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் சகோதரர் மீது இளம்பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் காவல்நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, தனது மகளை காணவில்லை என்றும், பாராஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாரியப்பனின் சகோதரன் கடத்தியதாகவும் அளித்த புகாரே இந்த பரபரப்புக்கு காரணம்.

love

அதாவது, அண்ணாமலை தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில், கடந்த 27ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது மகள் பவித்ரா (20), அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. விசாரித்ததில், பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பியான, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த கோபி (24) கடத்திச்சென்றது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது மகளை மீட்டுதர வேண்டும், என கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோபி - பவித்ரா இருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில், கோபி - பவித்ரா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருதரப்பிலும் பேச்சு நடத்தி வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it