Theme Check

டெய்லி ரிப்போர்ட் கொடுங்க.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

டெய்லி ரிப்போர்ட் கொடுங்க.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

டெய்லி ரிப்போர்ட் கொடுங்க.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!
X

கேரளாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 213 பேர் கொரோனாவுக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே பலியாகி உள்ளார்.

மற்றவர்கள், சில நாட்களுக்கு முன்பு இறந்தும், கணக்கில் சேர்க்கப்படாதவர்கள் ஆவர். விடுபட்ட அந்த மரணங்களையும் கேரள அரசு ஒரு நாள் மரண கணக்கில் சேர்த்துள்ளது.

இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராஜன் என்.கோப்ரகடேவுக்கு மத்திய சுகாதார அமைச்சக இணை செயலர் லாவ் அகர்வால் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
ANI on Twitter:
அதில், “கேரள அரசு தனது மாநில அளவிலான கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை 5 நாள் கழித்து தெரிவித்து இருக்கிறது. இது, கொரோனா மரணங்கள், பாதிப்புகள் உள்ளிட்ட நிலவரத்தை கண்காணிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கொரோனா விவரங்களை நாள்தோறும் தெரிவிக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. அப்போதுதான் கொரோனா நிலவரத்தை துல்லியமாக புரிந்து கொண்டு முக்கியமான முடிவுகள் எடுக்க முடியும்.

கொரோனா என்பது அதிகமாக பரவக்கூடியது. புதிதாக உருமாற்றம் அடையக்கூடியது. எனவே, தினந்தோறும் தகவல்களை அளித்தால் தான் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான நிலவரத்தை ஆய்வு செய்து வியூகம் வகுக்கலாம்.

ஆகவே, கொரோனா குறித்த புள்ளிவிவரங்களை நாள்தோறும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Next Story
Share it