ஒரு வாரம் அவகாசம் கொடுங்க.. அரசிடம் கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி..!
ஒரு வாரம் அவகாசம் கொடுங்க.. அரசிடம் கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி..!

தமிழகத்தில், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (teacher eligibility test 2022) தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அத்துடன், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக தேர்வு வாரியத்தின் இணையதளம் சரிவர இயங்காமல் உள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் தேதியை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

