Theme Check

ட்விட்டரில் திடீர் ட்ரெண்டிங்கில் 'கோ பேக் மோடி'..!!

ட்விட்டரில் திடீர் ட்ரெண்டிங்கில் 'கோ பேக் மோடி'..!!

ட்விட்டரில் திடீர் ட்ரெண்டிங்கில் கோ பேக் மோடி..!!
X

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருகிறார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் ரெட்டி. கர்நாடகா முதலமைச்சர் பசவராஜு பொம்மை, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதலாகவே ட்விட்டரில் கோ பேக் மோடி ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. இன்று இந்திய அளவில் முதலிடத்திற்கு #GoBack_Modi ஹேஷ்டேக் வந்துள்ளது. தமிழ்நாடு பாஜகவினர் #VanakkamMlodi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய முயற்சி எடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் கோ பேக் மோடி முதலிடத்தில் உள்ளது.

மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை போல் வெற்று அறிக்கையான திட்டங்கள் தேவையில்லை, நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை கோ பேக் மோடி தான், இது பிரதமர் மோடிக்கு எதிரானது அல்ல மாறாக ஆர்.எஸ்.எஸ். ஸின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரானது. தமிழர்களுக்கு இந்து மற்றும் இந்துத்துவாவுக்கு இடையேயான வித்தியாசம் நன்றாகவேத் தெரியும் போன்ற கருத்துக்களுடன் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

GoBackModi

Tags:
Next Story
Share it