Theme Check

‘கோ பேக் மோடி’ கோஷம் மிஸ்சிங்.. துரை வைகோ விளக்கம்..!

‘கோ பேக் மோடி’ கோஷம் மிஸ்சிங்.. துரை வைகோ விளக்கம்..!

‘கோ பேக் மோடி’ கோஷம் மிஸ்சிங்.. துரை வைகோ விளக்கம்..!
X

பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ எனும் கோஷம் ட்ரெண்டிங் ஆகும். மதிமுக ஆவேசமாக இந்தக் குரலை எழுப்பும்.

ஆனால், இந்த முறை மதிமுக அமைதியாக இருந்தது. இதுகுறித்து மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது; “கடந்த கால சூழ்நிலை வேறு. அப்போது நீட் எதிர்ப்பு தலை தூக்கி நின்றது. தமிழகத்துக்கு எதிராக பல பிரச்சனைகளும் தலைதூக்கி நின்றன.

ஆனால் இந்த முறை தமிழக மக்கள் நலனுக்காக 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க மோடி வந்தார்.

முழுக்க முழுக்க தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். இந்த சூழ்நிலையில் ‘கோ பேக் மோடி’ என்பது நியாயமல்ல.. முறையல்ல.

அமித்ஷா, தமிழக மக்களிடம் மோடி மீது அன்பும், ஆதரவும் பெருகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதை தேர்தல் வரும் போது தான் பார்க்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, கொலைகள் அதிகரித்து விட்டது என்பது சரியல்ல. கடந்த ஆட்சியிலும் கொலைகள் நடந்தது. ஆனால் இப்போது குற்றவாளிகளை உடனே பிடிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள்.

பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்தக் கட்சியின் தனிப்பட்ட கொள்கை.

மோடி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். அவர் அரசியல் செய்யவில்லை.

அண்ணாமலை தான் அவதூறு பரப்புகிறார். அவரது பெயரையே நான் அவதூறு அண்ணாமலை என்றுதான் கூறுவேன்” என அவர் கூறினார்.

Next Story
Share it